* வெளிச்சம் இல்லை என்று
இரவுகள் எப்போதும்
இரக்கப்படுவதில்லை!
* ஆயிரம் மின்மினிப் பூச்சுகள்
இரவில் ஒன்று கூடினாலும்
பகலில் பறக்கும் பட்டாம்
பூச்சிகளுக்கு இணையாகுமா?
இருட்டறைக்குள் தாழ்ப்பாள்
போட்டுக் கொண்டு
சூரியன் கண்ணுக்குத்
தெரியவில்லை
என்று
அஞ்ஞானம்
பேசித் திரிவதில் தான்
உனக்கு ஞானம் என்பதா?
* சுழன்று வீசும் காற்றை முதலில்
அனுபவித்துப் பார் அப்போது தான்
தென்றலின்
அருமை உனக்குப் புரியும்!
* கடுங்குளிரில் நடுங்கும் போது
ஆபத்தான நெருப்பு அப்போது
இதமாகத் தெரியும்.
புகழ்ச்சியும், இகழ்ச்சியும்
நெருப்பும், குளிரும் போல...
* பாதையெங்கும்
மலர்கள் இருந்தால்
பாதங்களுக்கு வலிமை இருக்காது.
கூழாங்கற்களும் சிறு, சிறு
முட்களும் பதம் பார்த்தால்தான்
பாதங்களும் கவனமாய்
பாதை பார்த்து நடக்கும்!
* வேதனை கொள்ளும் மனம் தான்
சாதனை பதியம் போடுகிறது.
முள் இல்லாத ரோஜா செடிகள்
எங்கேனும் முளைக்கிறதா?
* தேசிங்கு ராஜா என்றாலும்
போர்முரசு
கொட்டி விட்டால் வாளெடுத்து தானே தீர வேண்டும்.
வாழ்க்கை என்று வந்து விட்டால்
வளைந்து பார்த்து
வாழ்ந்து தானே ஆக வேண்டும்!
* வளைந்து செல்லும் நதிகளைப் போல
வாழ்விலும் தாழ்ந்து சென்றால்
நட்பும், உறவுகளும் வாழ்த்திடுமே!
* பாதி மெய்யும், பாதி பொய்யும்
கவிதைக்கு அழகு தான்...
இன்பம் பாதி, துன்பம் பாதி
வாழ்க்கைக்கு தேவை தான்!
* சோதனை முடிச்சுகள் அவிழ்ப்பதில்
தான் வாழ்க்கையின்
சூட்சமம்...
சோதனையை எதிர் கொள்பவன்
சாதனைப்
படிக்கட்டில்
ஏறிப் போகிறான்...
* வாழ்க்கை அழகிய
பூந்தோட்டம்.
அதில் நம்பிக்கை விதையை
விதைப்பவன்
வசந்த வாசலை
திறப்பு விழா செய்கிறான்.
அப்போது,
வானமும் வசப்படும்!
தேங்க்ஸ் டு...
எம்.அமிர்தராஜன் & தினமலர்
No comments:
Post a Comment